2024-04-06

தங்கா | அரவின் குமார்

ஒரு கலைஞன்; ஓர் ஓவியம்; ஒரு திரைப்படம்


எளிய மொழியில் ஆழமானவற்றைத் தொட்டுக் காட்டிவிட முடியுமென்பதற்கு வல்லினத்தில் வரும் கோகிலவாணியின் கலையைப் பற்றிய கட்டுரைகளே சான்று. நேபாளப் பயணத்தின் போது அவர் வகுத்திருந்த பயணத்திட்டத்தின் படி தங்கா கலைக்கூடத்துக்கு நானும் உடன் சென்றிருந்தேன். தங்கா பாணி ஓவியங்களைத் தீட்டுவதன்  நுட்பமும் அதன் நுணுக்கங்களும் அதுவரை நான் அறியாதவை. பெளத்தச் சமயத்தின் சாரம்சத்தை வண்ணங்களாகவும் வடிவங்களாகவும் நுணுக்கமாய் வெளிப்படுத்தும் ஓவியப்பாணியைப் பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.  பெளத்தச் சமயக்கருத்துகளைப் பத்தாண்டுகளாகப் பயின்றே தங்காபாணி ஓவியங்களை வரைகின்றனர். ஒரு பார்வையில் எல்லா ஓவியங்களும் ஒரே மாதிரியானவை என்றுகூட சொல்லிவிடலாம். எங்களுக்கு ஓவியங்களை விளக்கிக் கொண்டிருந்த டிக்ஷனும் சரி அவரின் தந்தையும் நாற்பதாண்டுகளாய் ஓவியம் வரையும் பாபுலால் லாமாவும் சரி தங்கா ஓவியங்களில் ஓவியர்களின் தனித்தன்மை எப்படி வெளிப்படும் என்ற கேள்விக்கு அப்படித் தனித்தொன்றை அடையாளம் காட்டிவிட முடியாதென்றே சொன்னார்கள். அப்படி தங்களதெனத் தனித்தொன்றைக் கலையில் விட்டுச் செல்ல அனுமதிக்காத அகத்தையே பயில்கிறார்கள். ஆனால், அதையும் தாண்டி கலைஞனின் மனத்தில் ஏற்படும் நுட்பமான இடத்தைச் சரியாகத் தொட்டுக் காட்டிக் கட்டுரையை கோகிலவாணி எழுதியிருக்கிறார். நண்பர்கள் வாசிக்கவும்.



அரவின் குமார் (Aravin Kumar)





No comments:

Post a Comment