2025-07-19

தாளம் தவறிய நாள் – ஜாகிர் ஹுசைன் | Review

 இசைக் கலைஞன் ஜாகிர் ஹுசைன் பற்றி அவ்வளவாக அறிந்ததில்லை.. இந்தக் கட்டுரை அதற்கு அஸ்திவாரம் இட்டுள்ளது.

நீங்கள் அஞ்சலி கட்டுரை படைத்திருப்பினும், இதில் உங்களின் அற்புத கலாரசனையும் அதன் சூழலில் நீங்கள் வளர்ந்திருப்பதும் அதற்காக உங்களின் குடும்ப உறுப்பினர்கள் பக்கபலமாக இருந்திருப்பதையும் நன்கு உணர முடிகிறது.
கட்டுரை வாசிப்பிற்குப் பிறகு நான் கேட்டுக் கொண்டிருப்பது அவரின் இசையை… நன்றி வாணி நல்ல கலை அறிமுகத்திற்கு.
இசையால் அவர் வாழ்வார். நல்ல கலைஞனுக்கு மரணமில்லை.

ஶ்ரீவிஜி




வணக்கம் அக்கா
ஜாகீர் உசேன் கட்டுரையை வாசித்தேன். Best tribute to zakir. //ஒரு கலை என்பது புதிதாக இறக்கை முளைத்துப் பறக்கத் துவங்கும் பறவை அல்ல; அது பல நூற்றாண்டுகளாக பறந்துகொண்டிருக்கும் பறவை. நாம் அதனுடன் சேர்ந்து பறக்க முயல்வதற்கு முன்னர், அது எங்கே சென்றது, யார் வழிநடத்தினர், எவ்வளவு உயரம் தொட்டது //

ஜாகிர் உங்களுக்கு எவ்வாறு அறிமுகமானார் எனத் தனி அனுபவத்திலிருந்து தொடங்கி எப்படி உங்களுக்கு அணுக்கமானார் என்பது வரையில் அனுபவமும் உங்கள் நுண்ணுணர்வும் சேர்ந்து ஜாகிர் உசேனின் சித்திரம் கட்டுரையில் எழுகிறது. //தபேலாவை வாசிக்க இயலாததுதான் அவரைச் சிதைத்திருக்கும்// ஒரு கலைஞனின் மெய்யான மரணமென்பது அவன் ஆராதிக்கும் கலை அவனை விட்டு விலகுவதுதான். You managed to capture the impact of zakir on you and what the loss meant to you and music lovers..love it




No comments:

Post a Comment