2022-03-05

Feedback for "கீரவாணி"

 

கீரவாணி




யதிராஜ ஜீவா
September 2, 2021
விவரணங்கள் வாசக மனதில் காட்சிப்படுத்துவதை மிக இயல்பாய் செய்கின்றன…”அவனின் அம்மா சாதத்துடன் சங்கீதத்தையும் ஊட்டியிருக்க வேண்டும்போன்ற வரிகள் அழகுவாழ்த்துகள்


 
கோ.புண்ணியவான்
September 5, 2021
இசை துறை சார்ந்து மிக ஆழமாக எழுதியிருக்கிறார். மிக அபூர்வமாகவே மலேசியாவில் இவ்வாறான கலைஞர்கள் காணக்கிடைக்கிறார்கள்.



 
Johnson
September 5, 2021 at 11:33 am
அருமையான பதிவு. நீண்ட நாளுக்குப் பிறகு வாசிக்க ஒரு தூண்டல் கிட்டியது. நன்றி


 
ஸ்ரீவிஜி
September 5, 2021 at 5:33 pm
பத்தி என்று அடையாளப்படுத்தியிருந்ததால் கர்நாடக சங்கீதம் பற்றிய கட்டுரையாக இருக்குமோ என்றிருந்தேன். அற்புதமான சிறுகதையை வாசித்த அனுபவம் ஏற்பட்டடது. கீரவாணி என்னைக் கிறங்கடிக்கும் ராகம். இளையராஜா இல்லாமல் இந்த ராகமெல்லாம் எளிய மக்களைச் சென்று சேருவதற்கு சாத்தியமில்லாமல் போயிருக்கும். அழகிய கேமரன்மலைச் சூழலை நம் முன் கொண்டுவந்து வாசித்து முடித்தவுடன் `காற்றில் எந்தன் கீதம்..’ என்கிற பாடல் அங்குள்ள ரோஜாவில் ஒட்டிய பனியாய் மனதில் ஒட்டிக்கொண்டு அசைபோட வைத்துவிட்டது. மெல்லிய கிளர்ச்சியை உணரமுடிந்தது. அருமை.

 

 

எம்.கோபாலகிருஷ்ணன் 

November 1, 2021

கீரவாணிஎன்ற பத்தியும் இச்சிறப்பிதழில் இடம் பெற்றுள்ளது.ராகத்துக்கும் உணர்ச்சிகளுக்கும் உள்ள தொடர்புகளைக் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மனோதத்துவ முறையிலும் இசை நுட்பங்களின் அடிப்படையிலும் அதைப் பகுத்தாயும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சாஸ்திரீய சங்கீதத்தை உயரியதாகவும் சினிமா தொடர்பான இசையை அவ்வாறல்லாத ஒன்றாகவும் அணுகும் மனோபாவமும், உயர்ந்தது தாழ்ந்தது என்ற வாதங்களும் முடிவை எட்டாது வெவ்வேறு குரல்களில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பவை. கலையின் தூய்மைவாதம் குறித்த தர்க்கங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மேலெழுந்து புதிய குரல்களில் புதிய சட்டகங்களைக்கொண்டு ஒலித்துக் கொண்டுதான் உள்ளனகீர்த்தனைகளைப் பாடுவது உயர்வானது என்றும் அதே ராகத்தில் அமைந்த சினிமா பாடலைப் பாடுவது கூடாது என்பதுமான கருத்தோட்டத்தின் அடிப்படையிலான விவாதத்தை இந்தப் பத்தி ஒரு அனுபவக் கதையாக முன்வைக்கிறதுகலை எந்த வடிவிலும் இருக்கலாம், கற்றுக் கொள்ள எதுவும் இருப்பின் அதில் உயர்வு தாழ்ச்சி எதுவும் கிடையாது என்பது அடிப்படை. அதைத்தான் இந்தப் பத்தியில் சரளமாகவும் பிசிறில்லாமலும் ஒரு தேர்ந்த புனைகதைபோல எழுதப்பட்டுள்ளதுஅம்மாவுக்கும் மகளுக்குமான தலைமுறை இடைவெளி, ரசனை மாற்றமே கீர்த்தனைக்கும் சினிமா இசைக்குமான இடைவெளியாக முரணாக அமைகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் இசை ஆசிரியருக்கும் சினிமாப் பாடல்களுக்குமான உறவு, அதன் முரண்கள் என்று இரு சரடையும் இதில் இணைக்க வாய்ப்பிருக்கிறது.
ஒருவகையில் இந்தப் பத்தி இளையராஜாவுக்கான புகழாரங்களில் ஒன்று.
மோகமுள் நாவலில் இடம் பெற்றுள்ள கீர்த்தனைகளை, ராகங்கள் அந்தந்த சந்தர்ப்பங்களுக்கு பொருந்தும்படி அமைத்துள்ளார் தி.ஜா என்று சொல்லப்படுகிறது. இசை தெரிந்தவர்களிடம் விரிவாக அதைக் குறித்து விசாரித்தால் நாவலுக்கு இன்னும் அது வலுசேர்க்கக் கூடும்.

 

Navin Manogaran

September, 4 2021

நெடுநாளைக்குப் பிறகு வல்லினத்தில் வந்துள்ள சிறந்த பத்தி எழுத்து. கீரவாணி எனும் ராகம் இயற்கையில் கலந்து என்ன செய்கிறது என எழுதும் இடம், ஒரு சிறந்த சிறுகதையை வாசித்த அனுபவத்தைக் கொடுக்கிறது

 

Nachammal Nachiamuthu

Sptember, 5 2021

அற்புதமான படைப்பு வாணி...படிக்க படிக்க தெவிட்டாத தேனமிர்தம் போன்று இருக்கிறது ..உன் அருமை அம்மா அவர்களை நினைவு கூறுகிறேன் ....வாழ்த்துகள் மா..தொடரட்டும் உன் கலைப்பணி...

 

No comments:

Post a Comment